Posts

Showing posts from September, 2020

இருதயராஜ் சார்

  ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் பதிவேற்றணும்ன்னு நெனச்சது, கொஞ்சம் தாமதமான பதிவுதான் But its better late than never அப்படிங்குறதால இன்னைக்கு பதிவேற்றம். இன்னும் ஞாபகம் இருக்கு , மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தப்போ டிவி பக்கத்துல இருக்குற ஜன்னலின் கம்பியை கையால் பிடிச்சிக்கிட்டு கண்ணில் வழிய காத்துக்கிட்டு இருந்த கண்ணீரை அடக்கி வச்சிட்டு உறுதியான குரல்ல "இல்லப்பா நான் வேற ஸ்கூல் மாறிக்கிறேன்" ன்னு அண்ணன் சொன்னது. சிலநாட்களாகவே பிரச்சனைன்னு தெரியும் அவன் ரொம்ப மன உளைச்சல்ல இருக்கிறதும் தெரிஞ்சது. நமக்குத்தான் படிக்கிறது கஷ்டம். பள்ளிக்கூடம் போனாலே dictation, ரேங்க் கார்டு முட்டி போடுறது இம்போசிஷன் ன்னு ஆயிரத்தெட்டு பிரச்சனை. நாமளே கம்முன்னு பள்ளிக்கூடம் போயிட்டு வரோம். நல்லா படிச்சி நமக்கு கெட்ட பேர் வாங்கிக்கொடுக்குற இவனுக்கு ஸ்கூலுக்கு போக என்ன பிரச்சனை? ஒருவேளை பதினொன்னாவது வகுப்புக்கு இங்கிலீஷ் மீடியம் மாறினதால படிக்க கஷ்டமா இருக்கோ? ன்னு நானே மனசுகுள்ள கேள்வி கேட்டுகிட்டே சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். மதியம் அப்பா லீவு போட்டுட்டு அண்ணனின் பள்ளிக்கு கூட போனாங்க. சாயந்திரம...

கயல் 3.0

Image
  கைபேசியின் "டிங்" சத்தமும் "பளிச்" ஒளியும் அசந்து தூங்கின என்னை மத்த நாட்களில் எழுப்பியிருப்பது சந்தேகம் தான், அன்னைக்கு "டிங்" சத்தம் அடங்குறதுக்குள்ள போன் unlock ஆகி இருந்தது... ஒருவித பதட்டத்தோட ஒரு நொடி கைபேசியின் ஓரத்தில் மணி பார்த்துகிட்டே குறுஞ்செய்தியை திறந்து பார்த்ததும் ஒரு சிறு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டது. "உசிரோடதான் இருக்கேன், will call tomorrow " ன்னு தங்கிலீஷ்ல அனுப்பியிருந்தாள்.... ஓகே குட் நைட் என்று பதில் அனுப்பிட்டு கண்ணை மூடினா அவ்வளவு தூக்கமும் போயி அங்க என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சிகிட்டே விடிய விடிய முழிச்சிருந்தேன். மறுநாள் சனிக்கிழமை கயல் ஒரு பத்து மணி வாக்குல போன் செஞ்சா. வழக்கமான ஹாய் ஹலோ வுக்கு பிறகு, என்னடி ஆச்சு என்ற என் கேள்விக்கு "ம்ம்ம்ம் இன்னைக்கு மத்தியானம் நீ free யா" என்றாள். நானும் "ஒரு நாலஞ்சு appointments இருக்கு உனக்காக கேன்சல் செஞ்சிடுறேன்" என்றேன். "சரி 3 மணி போல ஹாஸ்டல் வரேன்" என்றாள் என்னுடைய நகைச்சுவையை(!) கண்டுகொள்ளாமல். இன்னும் ஐந்து மணி நேரம் இருந்தது....