கயல் 2.0

 நீதான் அவனை திருத்தணும். கல்யாணம் ஆனா மாறிடுவான். அதுக்காகவா அவனை வேணாம்ன்னு சொல்லுற என்று அடுக்கிக்கொண்டே போன செண்பகம் அத்தையை கயலின் அந்த ஒற்றை வரி ஒரு நிமிடம் திகைப்படைய வைத்தது.

"நான் என்ன சோசியல் சர்விஸ்ஸா செய்யிறேன்" ன்னு கயல் அவளோட தொனியில சொன்னதும் அவ்வளவு நேரம் ரொம்ப சீரியஸ்ஸா இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது. செண்பகம் அத்தைக்கு பயந்து கொஞ்சம் எல்லாருமே அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்க வேண்டி இருந்தது. (எதாவது சொல்லி நம்மள சிரிக்க வச்சி யார்கிட்டயாவது மாட்டிவிட்டுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி பாவமா மூஞ்சிய வச்சிக்கிறதுல கயலை அடிச்சிக்கவே முடியாது.)

அத்தைக்கு ஏற்கனவே என் மேல ஒரு டவுட். நான்தான் இவளை உசுப்பேத்தி இருப்பனோனு, கயலின் அம்மா கிட்ட கூட சொல்லி இருந்தாங்க "நான் வளர்த்த பிள்ளை என் பேச்சை தட்டவே தட்டாது, அவ சேர்க்கை(நான் தான் அந்த சேர்க்கை) சரியில்லை"ன்னு. இப்போ confirm செஞ்சிருப்பாங்க . "ஒரு சாத்துக்குடி ஜூஸ்க்கும் சமோசாவுக்கும் ஆசைப்பட்டு இங்க வந்து மாட்டிகிட்டயே டான்யா"ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு "ஹாஸ்டல்ல வார்டன் தேடுறாங்களாம் நான் கிளம்புறேன்" னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.

ஹாஸ்டெல்க்கு போன பிறகும் நான் அனுப்பின எந்த மெசஜ்க்கும் பதிலும் வராததால கொஞ்சம் கலக்கமா இருந்தது. சின்ன வயசுல பார்த்த/கேட்ட சில உறவினர்களின் கட்டாய கல்யாணங்களும், சேசிங் கல்யாணங்களும் வேற அந்நேரம் பார்த்து ஞாபகம் வந்து தொலைத்தது.

நாம பாதியில வந்திருக்கக் கூடாதோன்னு ஒரு குற்ற உணர்ச்சியும் கூட. உண்மையில் அவங்க குடும்ப விஷயங்கள் பேசும்போது நாம இருந்தா தேவையில்லாத சங்கடங்கள், பிரச்சனைகள் வந்துடக்கூடாதுன்னுதான் கிளம்பி வந்தேன்(என் ராசி அப்படி). கயல் கிட்ட இருந்து மெசேஜ் வருதான்னு பார்த்துகிட்டே கையில போனை வச்சிட்டு கொஞ்சம் அசந்துட்டேன்.

'டிங்' ன்னு ஒரு சத்தம். அந்த இருட்டுல கண்ணை கூசுற மாதிரி வெளிச்சத்தோடு "1 New Message" னு என் கைபேசி ஒளிர்ந்தது.

Comments

Popular posts from this blog

அரசுப்பள்ளி

இருதயராஜ் சார்

முத்துலட்சுமி