தளவாய்சாமி சார்

 3 பள்ளிகள், ஒரு கல்லூரி, கிட்டத்தட்ட 10 பணியிடங்கள், ஆறேழு ஊர்களையும் பார்த்தச்சு. நிறைய நல்ல மனிதர்கள், சில நண்பர்கள், சில எதிரிகள் ஒன்றிரண்டு துரோகிகள்னு ஒரு சிறிய வட்டம் தான். சிலர் நம்ம வாழ்க்கைல இப்பவும் இருப்பாங்க. சிலர் இப்ப இல்லனாலும் நெனச்சு பார்க்க லட்சம் நினைவுகள் இருக்கும்.

எனக்கு எப்போ தொடக்க பள்ளி நாட்களை நினைச்சாலும் முதல்ல ஞாபகம் வர்றது, தளவாய்சாமி சார் தான். எனக்கு ரொம்ப பிடிச்ச தலைமை ஆசிரியர். அவர் எங்க அப்பாவுக்கும் ஆசிரியர் அப்படிங்கிறது கூடுதல் சிறப்பு. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை, சட்டை பாக்கெட்ல ஒரு இங்க் பேனா மாட்டி ஜம்முனு வருவாரு. கிளாஸ் டீச்சர்க்கு பயப்படுற நான்(நம்பணும்), சாரை பார்த்து பேசுறதுக்கு பயந்ததே கிடையாது.
எங்க பார்த்தாலும் ஓடிப் போய் பேசிட்டு வந்துடுவேன்.
சார் கிட்ட பேசும்போதெல்லாம் கண்டிப்பா புதுசா ஒரு விஷயம் நம்ம மண்டைக்குள்ள நமக்கே தெரியாம ஏறி இருக்கும். நம்மள சுத்தி இருக்குற/ நடக்குற விஷயங்களை அறிவியல் சார்ந்து யோசிக்க வச்சிடுவார். "கண்டிப்புடன் கூடிய கனிவு" அது சார்தான், சார் மட்டும் தான்.
தேங்க் யூ சார், 27 வருடங்கள் கழித்தும் நினைவில் நிற்கும் தருணங்கள் தந்ததற்கு.

Comments

Popular posts from this blog

அரசுப்பள்ளி

இருதயராஜ் சார்

முத்துலட்சுமி