Posts

இருதயராஜ் சார்

  ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் பதிவேற்றணும்ன்னு நெனச்சது, கொஞ்சம் தாமதமான பதிவுதான் But its better late than never அப்படிங்குறதால இன்னைக்கு பதிவேற்றம். இன்னும் ஞாபகம் இருக்கு , மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தப்போ டிவி பக்கத்துல இருக்குற ஜன்னலின் கம்பியை கையால் பிடிச்சிக்கிட்டு கண்ணில் வழிய காத்துக்கிட்டு இருந்த கண்ணீரை அடக்கி வச்சிட்டு உறுதியான குரல்ல "இல்லப்பா நான் வேற ஸ்கூல் மாறிக்கிறேன்" ன்னு அண்ணன் சொன்னது. சிலநாட்களாகவே பிரச்சனைன்னு தெரியும் அவன் ரொம்ப மன உளைச்சல்ல இருக்கிறதும் தெரிஞ்சது. நமக்குத்தான் படிக்கிறது கஷ்டம். பள்ளிக்கூடம் போனாலே dictation, ரேங்க் கார்டு முட்டி போடுறது இம்போசிஷன் ன்னு ஆயிரத்தெட்டு பிரச்சனை. நாமளே கம்முன்னு பள்ளிக்கூடம் போயிட்டு வரோம். நல்லா படிச்சி நமக்கு கெட்ட பேர் வாங்கிக்கொடுக்குற இவனுக்கு ஸ்கூலுக்கு போக என்ன பிரச்சனை? ஒருவேளை பதினொன்னாவது வகுப்புக்கு இங்கிலீஷ் மீடியம் மாறினதால படிக்க கஷ்டமா இருக்கோ? ன்னு நானே மனசுகுள்ள கேள்வி கேட்டுகிட்டே சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். மதியம் அப்பா லீவு போட்டுட்டு அண்ணனின் பள்ளிக்கு கூட போனாங்க. சாயந்திரம

கயல் 3.0

Image
  கைபேசியின் "டிங்" சத்தமும் "பளிச்" ஒளியும் அசந்து தூங்கின என்னை மத்த நாட்களில் எழுப்பியிருப்பது சந்தேகம் தான், அன்னைக்கு "டிங்" சத்தம் அடங்குறதுக்குள்ள போன் unlock ஆகி இருந்தது... ஒருவித பதட்டத்தோட ஒரு நொடி கைபேசியின் ஓரத்தில் மணி பார்த்துகிட்டே குறுஞ்செய்தியை திறந்து பார்த்ததும் ஒரு சிறு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டது. "உசிரோடதான் இருக்கேன், will call tomorrow " ன்னு தங்கிலீஷ்ல அனுப்பியிருந்தாள்.... ஓகே குட் நைட் என்று பதில் அனுப்பிட்டு கண்ணை மூடினா அவ்வளவு தூக்கமும் போயி அங்க என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சிகிட்டே விடிய விடிய முழிச்சிருந்தேன். மறுநாள் சனிக்கிழமை கயல் ஒரு பத்து மணி வாக்குல போன் செஞ்சா. வழக்கமான ஹாய் ஹலோ வுக்கு பிறகு, என்னடி ஆச்சு என்ற என் கேள்விக்கு "ம்ம்ம்ம் இன்னைக்கு மத்தியானம் நீ free யா" என்றாள். நானும் "ஒரு நாலஞ்சு appointments இருக்கு உனக்காக கேன்சல் செஞ்சிடுறேன்" என்றேன். "சரி 3 மணி போல ஹாஸ்டல் வரேன்" என்றாள் என்னுடைய நகைச்சுவையை(!) கண்டுகொள்ளாமல். இன்னும் ஐந்து மணி நேரம் இருந்தது.

கயல் 2.0

  நீதான் அவனை திருத்தணும். கல்யாணம் ஆனா மாறிடுவான். அதுக்காகவா அவனை வேணாம்ன்னு சொல்லுற என்று அடுக்கிக்கொண்டே போன செண்பகம் அத்தையை கயலின் அந்த ஒற்றை வரி ஒரு நிமிடம் திகைப்படைய வைத்தது. "நான் என்ன சோசியல் சர்விஸ்ஸா செய்யிறேன்" ன்னு கயல் அவளோட தொனியில சொன்னதும் அவ்வளவு நேரம் ரொம்ப சீரியஸ்ஸா இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது. செண்பகம் அத்தைக்கு பயந்து கொஞ்சம் எல்லாருமே அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்க வேண்டி இருந்தது. (எதாவது சொல்லி நம்மள சிரிக்க வச்சி யார்கிட்டயாவது மாட்டிவிட்டுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி பாவமா மூஞ்சிய வச்சிக்கிறதுல கயலை அடிச்சிக்கவே முடியாது.) அத்தைக்கு ஏற்கனவே என் மேல ஒரு டவுட். நான்தான் இவளை உசுப்பேத்தி இருப்பனோனு, கயலின் அம்மா கிட்ட கூட சொல்லி இருந்தாங்க "நான் வளர்த்த பிள்ளை என் பேச்சை தட்டவே தட்டாது, அவ சேர்க்கை(நான் தான் அந்த சேர்க்கை) சரியில்லை"ன்னு. இப்போ confirm செஞ்சிருப்பாங்க . "ஒரு சாத்துக்குடி ஜூஸ்க்கும் சமோசாவுக்கும் ஆசைப்பட்டு இங்க வந்து மாட்டிகிட்டயே டான்யா"ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு "ஹாஸ்டல்ல

அரசுப்பள்ளி

  அரசுப்பள்ளியில் சேர்ந்ததும் முதல் பிரமிப்பே காலையில் நடக்கும் பிரேயர் மீட்டிங்கில் ஆரம்பிச்சது. பள்ளியில் இருந்த அத்தனை வகுப்பு மாணவிகளும், ஆசிரியர்களும் கூடி இருந்தாங்க . எவ்வளவு பெரிய கூட்டம்னு சொல்லணும்னா, ஆறிலிருந்து பன்னிரெண்டாவது வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்புக்கும்(grade) குறைந்தது 6-10 பிரிவுகள்(sections) ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 40லிருந்து 50 பேர் (அதிகமாகூட இருந்திருக்கலாம்). இத்தனைபேரை ஒரே இடத்தில, அதுவும் வரிசைல நான் பார்த்ததே இல்ல. இவ்ளோ கூட்டத்தில தொலைஞ்சு போயிடுவோமோன்னு பயம் தான் வந்தது. ஆபிஸ் ரூம்லபோய் எந்த section, என் கிளாஸ் எங்க இருக்கும்னு கேட்டுட்டு, ஒருவழியா என் கிளாஸ் தேடி கண்டுபிடிச்சு போனேன். (இதுல என்ன கஷ்டம்ன்னு யோசிக்கிறீங்கா? கஷ்டம்தாங்க, ஏன்னா கிளாஸ்ரூம் மரத்தடியில் . எந்த மரத்தடியில் என் கிளாஸ் இருக்குனு தேடணும்ல.) ஏற்கனவே ஸ்கூல் ஆரம்பிச்சு ஒருவாரம் பத்துநாள் ஆனதுனால வகுப்புகள் வழக்கம் போல போயிட்டு இருந்தது. மரத்தடியில் மண் தரையில் விளையாடிப் பழக்கம்தான், அதனால முதல்ல கஷ்டமா தெரியல. கொஞ்சநேரத்துல கணுக்கால் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிச்சது. நான் நெளி

First Rejection

Image
  ஒரு சில காரணங்களால் 6 வது வகுப்பிலிருந்து வேறு பள்ளிக்கு மாற வேண்டிய சூழ்நிலை. நான் படிச்ச பள்ளி குழுமத்தின் உயர்நிலைப் பள்ளியில் சேரணும்ன்னா நுழைவுத்தேர்வு உண்டு. அதுல பாஸ் ஆனா மட்டும்தான் 6வதில் சேர முடியும். இல்லைன்னா வேறு பள்ளிகளுக்குத்தான் மாறணும் . நான் 5வது படிக்கும்போது எங்க குடும்பத்துக்கும் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கும் ஒரு பிரச்சனை (காரணம் பொதுவெளியில் சொல்லலாமான்னு ஒரு சின்ன குழப்பம். யோசிச்சுட்டு இருக்கேன். ) . அதனால "கண்டிப்பா இடம் கொடுக்க மாட்டாங்க, நானும் போயி யார்கிட்டேயும் இடம் கொடுக்க சொல்லி கேட்க மாட்டேன்னு" அப்பா தெளிவா சொல்லிட்டாங்க. அம்மாவுக்கு, பெண்பிள்ளை கண்ணெத்துக்க வீட்டுக்கு பக்கத்துலயே(ஒரு 1/2 km-1km தான் தூரம்) ஸ்கூல்ல படிச்சா நல்லா இருக்குமேன்னு ஒரு நப்பாசை. அம்மாவும் நானும், நிர்வாகத்துல அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க, நாம எக்ஸாம் எழுதுவோம், மார்க் வாங்கினா எப்படி கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்கன்னு அடம் புடிச்சு application போட்டோம். (application கொடுத்தபோதே ரெட் மார்க் செஞ்சு ஓரமா வச்சிட்டாங்க. ) சொன்னா நம்ப மாட்டிங்க, வெறி கொண்டு பட

முத்துலட்சுமி

  பெரும்பாலான தமிழ் மீடியம் குழந்தைகளுக்கு இருந்த பயம் தான் எனக்கும் ஆங்கில பாடம் மேல இருந்தது. அதுலயும் டிக்டேஷன்னா என் கதை முடிஞ்சதுன்னு வச்சுக்கலாம். மூணாவது வகுப்பிலிருந்து ஆங்கிலம் அறிமுகம். அப்போதிருந்து எனக்கு அடிக்கடி தலைவலி வயித்துவலி எல்லாம் வரும், குறிப்பா மதியம் சாப்பிட வீட்டுக்கு போகிற நேரத்துல. அப்பாவும் ஆபிஸ்ல permission வாங்கிட்டு என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவாரு. காத்திருந்து டாக்டரை பார்த்து மாத்திரை வாங்கிட்டு வந்து, வீட்டுல விட்டுட்டு அப்பா மறுபடியும் ஆபீஸ் போவார். ஹோமியோபதி மாத்திரை சாப்பிட நல்லா இருக்கும், ஆனா டாக்டர் பீஸ்,மாத்திரை எல்லாம் சேர்ந்து குறைந்தது 50லிருந்து 100 ருபாய் காலி ஆகி இருக்கும். பட்ஜெட்ல வாழ்க்கை நடத்துற lower middle கிளாஸ் குடும்பம். நம்மளால இப்படி அனாவசியமா செலவாகுதேன்னு, கொஞ்ச நாள் கழிச்சு மனசு கேக்காம, அப்பாகிட்ட அழுதுகிட்டே, எனக்கு தலைவலி, வயிறு வலி எல்லாம் ஒன்னும் இல்ல. இங்கிலிஷ் பீரியட்க்கு போக பயமா இருக்குன்னு உண்மையை சொன்னேன். அப்புறம் அப்பா மனப்பாடம் செய்யாம எப்படி ஒரு வார்த்தையை எழுதுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக் கொடுத்தார்

தளவாய்சாமி சார்

  3 பள்ளிகள், ஒரு கல்லூரி, கிட்டத்தட்ட 10 பணியிடங்கள், ஆறேழு ஊர்களையும் பார்த்தச்சு. நிறைய நல்ல மனிதர்கள், சில நண்பர்கள், சில எதிரிகள் ஒன்றிரண்டு துரோகிகள்னு ஒரு சிறிய வட்டம் தான். சிலர் நம்ம வாழ்க்கைல இப்பவும் இருப்பாங்க. சிலர் இப்ப இல்லனாலும் நெனச்சு பார்க்க லட்சம் நினைவுகள் இருக்கும். எனக்கு எப்போ தொடக்க பள்ளி நாட்களை நினைச்சாலும் முதல்ல ஞாபகம் வர்றது, தளவாய்சாமி சார் தான். எனக்கு ரொம்ப பிடிச்ச தலைமை ஆசிரியர். அவர் எங்க அப்பாவுக்கும் ஆசிரியர் அப்படிங்கிறது கூடுதல் சிறப்பு. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை, சட்டை பாக்கெட்ல ஒரு இங்க் பேனா மாட்டி ஜம்முனு வருவாரு. கிளாஸ் டீச்சர்க்கு பயப்படுற நான்(நம்பணும்), சாரை பார்த்து பேசுறதுக்கு பயந்ததே கிடையாது. எங்க பார்த்தாலும் ஓடிப் போய் பேசிட்டு வந்துடுவேன். சார் கிட்ட பேசும்போதெல்லாம் கண்டிப்பா புதுசா ஒரு விஷயம் நம்ம மண்டைக்குள்ள நமக்கே தெரியாம ஏறி இருக்கும். நம்மள சுத்தி இருக்குற/ நடக்குற விஷயங்களை அறிவியல் சார்ந்து யோசிக்க வச்சிடுவார். "கண்டிப்புடன் கூடிய கனிவு" அது சார்தான், சார் மட்டும் தான். தேங்க் யூ சார், 27 வருடங்கள் கழித்தும்