Posts

Showing posts from August, 2020

கயல் 2.0

  நீதான் அவனை திருத்தணும். கல்யாணம் ஆனா மாறிடுவான். அதுக்காகவா அவனை வேணாம்ன்னு சொல்லுற என்று அடுக்கிக்கொண்டே போன செண்பகம் அத்தையை கயலின் அந்த ஒற்றை வரி ஒரு நிமிடம் திகைப்படைய வைத்தது. "நான் என்ன சோசியல் சர்விஸ்ஸா செய்யிறேன்" ன்னு கயல் அவளோட தொனியில சொன்னதும் அவ்வளவு நேரம் ரொம்ப சீரியஸ்ஸா இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது. செண்பகம் அத்தைக்கு பயந்து கொஞ்சம் எல்லாருமே அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்க வேண்டி இருந்தது. (எதாவது சொல்லி நம்மள சிரிக்க வச்சி யார்கிட்டயாவது மாட்டிவிட்டுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி பாவமா மூஞ்சிய வச்சிக்கிறதுல கயலை அடிச்சிக்கவே முடியாது.) அத்தைக்கு ஏற்கனவே என் மேல ஒரு டவுட். நான்தான் இவளை உசுப்பேத்தி இருப்பனோனு, கயலின் அம்மா கிட்ட கூட சொல்லி இருந்தாங்க "நான் வளர்த்த பிள்ளை என் பேச்சை தட்டவே தட்டாது, அவ சேர்க்கை(நான் தான் அந்த சேர்க்கை) சரியில்லை"ன்னு. இப்போ confirm செஞ்சிருப்பாங்க . "ஒரு சாத்துக்குடி ஜூஸ்க்கும் சமோசாவுக்கும் ஆசைப்பட்டு இங்க வந்து மாட்டிகிட்டயே டான்யா"ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு "ஹாஸ்டல்ல ...

அரசுப்பள்ளி

  அரசுப்பள்ளியில் சேர்ந்ததும் முதல் பிரமிப்பே காலையில் நடக்கும் பிரேயர் மீட்டிங்கில் ஆரம்பிச்சது. பள்ளியில் இருந்த அத்தனை வகுப்பு மாணவிகளும், ஆசிரியர்களும் கூடி இருந்தாங்க . எவ்வளவு பெரிய கூட்டம்னு சொல்லணும்னா, ஆறிலிருந்து பன்னிரெண்டாவது வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்புக்கும்(grade) குறைந்தது 6-10 பிரிவுகள்(sections) ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 40லிருந்து 50 பேர் (அதிகமாகூட இருந்திருக்கலாம்). இத்தனைபேரை ஒரே இடத்தில, அதுவும் வரிசைல நான் பார்த்ததே இல்ல. இவ்ளோ கூட்டத்தில தொலைஞ்சு போயிடுவோமோன்னு பயம் தான் வந்தது. ஆபிஸ் ரூம்லபோய் எந்த section, என் கிளாஸ் எங்க இருக்கும்னு கேட்டுட்டு, ஒருவழியா என் கிளாஸ் தேடி கண்டுபிடிச்சு போனேன். (இதுல என்ன கஷ்டம்ன்னு யோசிக்கிறீங்கா? கஷ்டம்தாங்க, ஏன்னா கிளாஸ்ரூம் மரத்தடியில் . எந்த மரத்தடியில் என் கிளாஸ் இருக்குனு தேடணும்ல.) ஏற்கனவே ஸ்கூல் ஆரம்பிச்சு ஒருவாரம் பத்துநாள் ஆனதுனால வகுப்புகள் வழக்கம் போல போயிட்டு இருந்தது. மரத்தடியில் மண் தரையில் விளையாடிப் பழக்கம்தான், அதனால முதல்ல கஷ்டமா தெரியல. கொஞ்சநேரத்துல கணுக்கால் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிச்சது. நான் ...

First Rejection

Image
  ஒரு சில காரணங்களால் 6 வது வகுப்பிலிருந்து வேறு பள்ளிக்கு மாற வேண்டிய சூழ்நிலை. நான் படிச்ச பள்ளி குழுமத்தின் உயர்நிலைப் பள்ளியில் சேரணும்ன்னா நுழைவுத்தேர்வு உண்டு. அதுல பாஸ் ஆனா மட்டும்தான் 6வதில் சேர முடியும். இல்லைன்னா வேறு பள்ளிகளுக்குத்தான் மாறணும் . நான் 5வது படிக்கும்போது எங்க குடும்பத்துக்கும் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கும் ஒரு பிரச்சனை (காரணம் பொதுவெளியில் சொல்லலாமான்னு ஒரு சின்ன குழப்பம். யோசிச்சுட்டு இருக்கேன். ) . அதனால "கண்டிப்பா இடம் கொடுக்க மாட்டாங்க, நானும் போயி யார்கிட்டேயும் இடம் கொடுக்க சொல்லி கேட்க மாட்டேன்னு" அப்பா தெளிவா சொல்லிட்டாங்க. அம்மாவுக்கு, பெண்பிள்ளை கண்ணெத்துக்க வீட்டுக்கு பக்கத்துலயே(ஒரு 1/2 km-1km தான் தூரம்) ஸ்கூல்ல படிச்சா நல்லா இருக்குமேன்னு ஒரு நப்பாசை. அம்மாவும் நானும், நிர்வாகத்துல அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க, நாம எக்ஸாம் எழுதுவோம், மார்க் வாங்கினா எப்படி கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்கன்னு அடம் புடிச்சு application போட்டோம். (application கொடுத்தபோதே ரெட் மார்க் செஞ்சு ஓரமா வச்சிட்டாங்க. ) சொன்னா நம்ப மாட்டிங்க, வெறி கொண்டு பட...

முத்துலட்சுமி

  பெரும்பாலான தமிழ் மீடியம் குழந்தைகளுக்கு இருந்த பயம் தான் எனக்கும் ஆங்கில பாடம் மேல இருந்தது. அதுலயும் டிக்டேஷன்னா என் கதை முடிஞ்சதுன்னு வச்சுக்கலாம். மூணாவது வகுப்பிலிருந்து ஆங்கிலம் அறிமுகம். அப்போதிருந்து எனக்கு அடிக்கடி தலைவலி வயித்துவலி எல்லாம் வரும், குறிப்பா மதியம் சாப்பிட வீட்டுக்கு போகிற நேரத்துல. அப்பாவும் ஆபிஸ்ல permission வாங்கிட்டு என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவாரு. காத்திருந்து டாக்டரை பார்த்து மாத்திரை வாங்கிட்டு வந்து, வீட்டுல விட்டுட்டு அப்பா மறுபடியும் ஆபீஸ் போவார். ஹோமியோபதி மாத்திரை சாப்பிட நல்லா இருக்கும், ஆனா டாக்டர் பீஸ்,மாத்திரை எல்லாம் சேர்ந்து குறைந்தது 50லிருந்து 100 ருபாய் காலி ஆகி இருக்கும். பட்ஜெட்ல வாழ்க்கை நடத்துற lower middle கிளாஸ் குடும்பம். நம்மளால இப்படி அனாவசியமா செலவாகுதேன்னு, கொஞ்ச நாள் கழிச்சு மனசு கேக்காம, அப்பாகிட்ட அழுதுகிட்டே, எனக்கு தலைவலி, வயிறு வலி எல்லாம் ஒன்னும் இல்ல. இங்கிலிஷ் பீரியட்க்கு போக பயமா இருக்குன்னு உண்மையை சொன்னேன். அப்புறம் அப்பா மனப்பாடம் செய்யாம எப்படி ஒரு வார்த்தையை எழுதுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக் கொடுத்...

தளவாய்சாமி சார்

  3 பள்ளிகள், ஒரு கல்லூரி, கிட்டத்தட்ட 10 பணியிடங்கள், ஆறேழு ஊர்களையும் பார்த்தச்சு. நிறைய நல்ல மனிதர்கள், சில நண்பர்கள், சில எதிரிகள் ஒன்றிரண்டு துரோகிகள்னு ஒரு சிறிய வட்டம் தான். சிலர் நம்ம வாழ்க்கைல இப்பவும் இருப்பாங்க. சிலர் இப்ப இல்லனாலும் நெனச்சு பார்க்க லட்சம் நினைவுகள் இருக்கும். எனக்கு எப்போ தொடக்க பள்ளி நாட்களை நினைச்சாலும் முதல்ல ஞாபகம் வர்றது, தளவாய்சாமி சார் தான். எனக்கு ரொம்ப பிடிச்ச தலைமை ஆசிரியர். அவர் எங்க அப்பாவுக்கும் ஆசிரியர் அப்படிங்கிறது கூடுதல் சிறப்பு. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை, சட்டை பாக்கெட்ல ஒரு இங்க் பேனா மாட்டி ஜம்முனு வருவாரு. கிளாஸ் டீச்சர்க்கு பயப்படுற நான்(நம்பணும்), சாரை பார்த்து பேசுறதுக்கு பயந்ததே கிடையாது. எங்க பார்த்தாலும் ஓடிப் போய் பேசிட்டு வந்துடுவேன். சார் கிட்ட பேசும்போதெல்லாம் கண்டிப்பா புதுசா ஒரு விஷயம் நம்ம மண்டைக்குள்ள நமக்கே தெரியாம ஏறி இருக்கும். நம்மள சுத்தி இருக்குற/ நடக்குற விஷயங்களை அறிவியல் சார்ந்து யோசிக்க வச்சிடுவார். "கண்டிப்புடன் கூடிய கனிவு" அது சார்தான், சார் மட்டும் தான். தேங்க் யூ சார், 27 வருடங்கள் கழித்தும்...

மகா

  அப்பாவுடைய நண்பர் ஒருநாள் ஒரு ஜோசியரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தாங்க. அந்த ஜோசியர்கிட்ட என்ன விஷேசம்ன்னா அவர் அப்போதான் இமயமலை எல்லாம் போயிட்டு அங்கே இருக்குற(?) மகான்களை எல்லாம் தரிசனம் செஞ்சிட்டு வந்தவராம். அப்பாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனா அம்மாவுக்கு அதீத நம்பிக்கை. கூட்டிட்டு வந்த மாமா ரொம்ப ஆன்மீகவாதி. என்னதான் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தாலும் அப்பா மீது அவருக்கு கொள்ளை பிரியம். அந்த உரிமைல அவரே வீட்டுக்கு ஜோசியரை கூட்டிட்டு வந்துட்டார். அப்பா சாதாரணமாவே யாரையும் கடிந்து பேசாதவர் அதனால நண்பரின் மனது புண்படக்கூடாதுன்னு ஒண்ணும் சொல்லல. அம்மா எல்லாருடைய ஜாதகமும் எடுத்து ஜோசியர்கிட்ட கொடுத்து பார்க்க சொன்னாங்க. அண்ணனுடைய ஜாதகத்தைப் பார்த்துட்டு ரொம்ப புண்ணிய ஜாதகம். சரஸ்வதியும் லக்ஷ்மியும் போட்டி போட்டு அள்ளிக் கொடுப்பாங்க. எண்பது வயசு வரைக்கும் நோய் நொடியில்லாம இருப்பான். வெளிநாட்டுல படிக்கிற வேலைக்குப் போகிற யோகம் இருக்குன்னு சொன்னாரு. அடுத்து என்னுடைய ஜாதகம். உத்து உத்து பார்த்துட்டு, பதிமூணு வயசுக்கு அப்புறம் நீங்க என்ன செஞ்சாலும் படிப்பு வராது. அதனா...

சைக்கிள்

Image
  சில விஷயங்கள் நமக்கு கத்துக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா/பயமா இருக்குன்னா ஒண்ணு நமக்கு அதில் ஈடுபாடு இல்லாம இருக்கணும் இல்லை அதை கத்துக்க வேண்டிய அவசியம்/கட்டாயம் இல்லாம இருக்கணும். எனக்கு சைக்கிள் கத்துக்கிறது அப்படித்தான் இருந்தது. ஐந்தாவது வரைக்கும் வீட்டுல எவ்ளோ சொல்லிக்கொடுக்க முயற்சி செஞ்சும் கீழே விழுந்துடுவோம்ன்னு பயந்துகிட்டு கத்துக்காம இருந்தேன்.எங்கே போனாலும் அப்பாவோ அண்ணனோ கூட்டிட்டு போறதால கத்துக்க வேண்டிய அவசியமும் இல்லாம இருந்தது. ஆறாவது படிக்கிறப்போ தினமும் அண்ணன் கூட சைக்கிள்ல போவேன். அவன் ஸ்கூலுக்கு போகும்போது என்னையும் கொண்டுபோய் விட்டுட்டு போவான். நாங்க ஸ்கூலுக்கு போற வழியில ஒரு மேடு வரும். அந்த மேட்டுல முக்கால்வாசி தூரம் போனதும் பெரும்பாலும் எல்லாரும் இறங்கி சைக்கிளை உருட்டிக்கிட்டுதான் போவாங்க. ஆனா நான் சைக்கிள்ல இருந்து இறங்க மாட்டேன்னு அடம்பிடிப்பேன்(கீதகோவிந்தம் படத்துல ரஷ்மிகா உர்ர்ன்னு வண்டியில உக்காந்துகிட்டு வருமே அதுமாதிரி).பாவம் என்னையும் டபுள்ஸ் வச்சிட்டு அந்த மேட்டுல சைக்கிள் அழுத்திட்டு/உருட்டிட்டு போவான். எலியும் பூனையுமா இருக்குற எங்களுக்குள்ள எப்போல...

கயல்

  கொஞ்சம் சென்சிட்டிவா தோணுச்சு. அதனால கேரக்டர்களின் பெயரையும் இடங்களின் விபரங்களையும் கொஞ்சம் மாத்திட்டேன்.வாங்க கயலை பத்தி தெரிஞ்சுக்கலாம் கயலின் அனுமதியோடு. எதோ நேத்து நடந்தமாதிரி இருக்கு ஆனா பத்து பதிமூணு வருஷம் ஆச்சு. சேத்துப்பட்டு ரயில் வே ஸ்டேஷன், சாதாரணமாவே கொஞ்சம் அமைதியாதான் இருக்கும். அதுவும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே, வந்துட்டு போற கொஞ்சநஞ்ச கூட்டமும் குறைஞ்சிடும். நான் முந்நூறாவது தடவையா கைல இருந்த போன்ல எதாவது மெசேஜ் இல்ல கால் வந்திருக்கான்னு பார்த்தேன். எதுவும் வரல. நேரம் ஆக ஆக கொஞ்சம் படபடப்பும் அதிகமாயிடுச்சு. அஞ்சு மணிக்கு வர சொல்லிட்டு இன்னும் வரலைன்னு கயல் மேல கோவம் கூட வந்தது. பேசணும்ன்னு போன் செஞ்சதுமே, போன்ல வேண்டாம்டி நேர்ல பேசலாம் நீ ஆபிஸ் முடிஞ்சு வரும்போது சேத்துபட்டுல இறங்கி வெயிட் பண்ணுடி நான் ஒரு அஞ்சு மணி போல வந்துடுறேன் என்றவளிடம் சரின்னு மட்டும்தான் சொல்ல முடிஞ்சது. இங்கே வெயிட் செஞ்சதுக்கு அவளோட ஆபீஸ்க்கே போயிருக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கும்போதே படிக்கட்டுல கயல் இறங்கி வர்றது தெரிஞ்சது. நீள முகம் அதில் ஒரு ரிம்லெஸ் கண்ணாடி, ஒல்லியான தேகம்...

சிவஜோதி

  சினிமால ஒரே பாட்டுல பெரியாளாகி வாழ்க்கைல முன்னேறுறது ஜெயிச்சி காட்டுறது எல்லாம் பார்க்கும்போது நினைப்பேன் நமக்கும் வைரமுத்துவோ வாலியோ ஒரு பாட்டு எழுதிக்கொடுத்தா நல்லா இருக்குமேன்னு. ஆனா நிஜ வாழ்க்கைல இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் உழைச்சி, நாலு நல்லது கெட்டதை பார்த்து கடந்து ஒவ்வொரு நாளையும் வாழ்ந்துதான் ஆகணும். நமக்கு புடிச்ச நிகழ்வுகளை rewind செய்யவும் முடியாது, பிடிக் கலைன்னு delete செஞ்சிட்டும் போக முடியாது. நிகழ்வுகள் நினைவுகளா நம்ம மனசுல எப்பவும் இருந்துட்டே இருக்கும். ஞாபகப்படுத்தி அதை கொண்டாடுறதும் அடிமனசுல ஆழமா புதைச்சு வச்சிக்கிறதும் நிகழ்வுகளின் தாக்கத்தை பொறுத்தது. ஆறாவது வகுப்புல காலைல சீக்கிரம் எழுந்து திருக்குறள் படிக்கிறது, செய்தித்தாள் வாசிக்கிறது, துளிர் படிக்கிறது, பள்ளிக்கூட பாடங்களை தினமும் படிக்கிறதுன்னு இருந்த ஆர்வமும் வெறியும் அப்படியே கழுதை தேஞ்சு கட்டெறும்பான மாதிரி கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சி பத்தாவது வகுப்பு படிக்கும் போது பொதுதேர்வுல 350 மார்க் வாங்குற அளவு படிச்சா போதும்ன்னு வந்து நின்னுச்சு. ஜோசியர் சொல்லிட்டு போனதோட எதிரொலியா, இல்ல commerce குரூப் தான் படி...